Dato’ Seri Amirudin Shari menyerahkan bantuan keperluan asas termasuk penutup muka dan cecair pembasmi kuman kepada penduduk Taman Batu Caves pada 4 April 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார், சுங்கை துவா சட்ட மன்ற தொகுதியின் அடிப்படை பொருட்கள் வழங்குவதை நேரில் பார்வையிட்டார்

பத்து கேவ்ஸ், ஏப்ரல் 4:

கடந்த மார்ச் 18 தொடங்கி அமல்படுத்தப்பட்டு வரும் நடமாடும் கட்டுபாடு ஆணையினால் (பிகேபி) பாதிக்கப்பட்ட சுங்கை துவா சட்ட மன்ற தொகுதியின் 1000 பேர்களுக்கு  அடிப்படை உணவு பொருட்கள் வழங்கப் பட்டன என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி. தமது சட்ட மன்ற அலுவலகம், நகராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராமத் தலைவர்கள் பொருட்களை விநியோகம் செய்யும் நடவடிக்கைகளை முதல் முறையாக நேரிடையாக பார்வையிட வந்தது குறிப்பிடத்தக்கது.

” இந்த நடவடிக்கை சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்து சட்ட மன்ற தொகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் கும்பலாக வருவதை பிகேபி காலகட்டத்தில் தவிர்க்க வேண்டும். ஆகவே, நாங்களாக காலையில் மற்றும் மாலையிலும் பொருப்களை வழங்கி வருகிறோம்,” என்று பிரிவு 6 மக்கள் செயற்குழு அலுவலகத்திற்கு வருகை புரிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு அமிருடின் கூறினார்.


Pengarang :