TERPELIHARA
NATIONALRENCANA PILIHANSELANGOR

முனைவர் ஸூல்கிப்லி: சிவப்பு பகுதிகளில் பிகேபியை கடுமையாக்கப்பட வேண்டும்; பாதுகாப்பான பகுதிகளில் தளர்த்தப்பட வேண்டும்

ஷா ஆலம், ஏப்ரல் 9:

அரசாங்கம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளான சிவப்பு பகுதிகளில் நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) நீட்டிக்கப்பட வேண்டும், அதே நேரத்தில், மற்ற பாதுகாப்பான பகுதிகளில் தளர்த்தப்பட்டது வேண்டும் என சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் (எஸ்திஎப்சி) தலைவர் முனைவர் டத்தோ ஸ்ரீ ஸூல்கிப்லி அமாட் தெரிவித்தார். அனைவரும் மிக முக்கியமான இரண்டு விடயங்களான சமூக இடைவெளி மற்றும் கூட்டம் கூட்டமாக வெளியாவதை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும் என நினைவு படுத்தினார்.

மலேசிய அரசாங்கம் கடந்த ஏப்ரல் 18-இல் கோவிட்-18 நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தியிருக்கும் நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) சரியான நடவடிக்கை ஆகும் என்றும் தற்போது நேர்மறையான பலன்களை நாம் கண்டு வருகிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

” இருந்தாலும், இந்த நடவடிக்கை பல்வேறு பொருளாதார சிக்கல்களை உருவாக்கும். சிறுதொழில் வணிகர்கள், தொழில் முனைவர்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள்,” என்று ஸூல்கிப்லி தெரிவித்தார்.


Pengarang :