Suasana Bazaar Ramadan pada 2018
RENCANA PILIHANSELANGOR

ரம்லான் சந்தை ஏற்பாட்டு நிறுவனங்கள் வர்த்தகர்களின் முன் பணத்தைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும்

ஷா ஆலம், ஏப்.10-

இவ்வாண்டு நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த ரம்லான் சந்தை தற்போது ரத்தாகியுள்ள நிலையில், இந்த இடங்களுக்கு வழங்கப்பட்ட வாடகை முன் கட்டணத்தை சம்பந்தப்பட்ட சந்தை ஏற்பாட்டு நிறுவனங்கள் திரும்பச் செலுத்த வேண்டும் என்று தொழில்முனைவட் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்ஸிடா இஸ்மாயில் கூறினார்.

அதே வேளையில், சம்பந்தப்பட்ட சந்தைகளின் மொத்த குத்தகை நிறுவனங்கள் இச்சந்தைகளுக்கான முன்னேற்பாடாக செலவுகள் ஏது செய்திருந்தால், அதற்காக சிறு தொகையை கழித்துக் கொண்டு எஞ்சிய பணத்தை நேர்மையான முறையில் திரும்பச் செலித்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

சந்தை இடங்களுக்கான மொத்த குத்தகை நிறுவனங்களும் விற்பனை பொருட்களுக்கான மொத்த வியாபாரிகளும் வர்த்தகள் செலுத்திய முன் பணத்தை திரும்ப ஒப்படைக்க மறுத்துள்ளதாக பல புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றார் அவர்.

எனவே, பெற்றுக் கொண்ட தொகையை முழுமையாகத் திரும்ப ஒப்படைக்க முடியாவிட்டாலும் முன் பணத்தையாவது திரும்ப ஒப்படைக்கும் வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு பொருளுக்காக ஒருவர் ரிம.1,000 செலித்தி இருந்தால் ரிம.200 ஐக் கழித்துக் கொண்டு எஞ்சிய பணத்தை ஒப்படைப்பது சம்பந்தப்பட்ட வர்த்தகளுக்கு பிரச்னை ஏதும் இருக்காது எனத் தாம் கருதுவதாக அவர் சொன்னார்.


Pengarang :