Ir Izham Hashim menyampaikan baucar petrol kepada Pengarah Lembaga Kemajuan Ikan Malaysia (LKIM) Selangor untuk diserahkan kepada 801 nelayan bagi meringankan beban akibat penularan Covid-19. Foto Pejabat EXCO
RENCANA PILIHANSELANGOR

801 சிலாங்கூர் மாநில மீனவர்களுக்கு ரிம 300 மதிப்பிலான பெட்ரோல் பற்றுச்சீட்டு

ஷா ஆலம், ஏப்ரல் 23:

சிலாங்கூர் மாநில மீனவர்களுக்கு ரிம 300 மதிப்பிலான பெட்ரோல் பற்றுச்சீட்டு மாநில அரசாங்கம் வழங்க இருப்பதாக நவீன விவசாயம் மற்றும் விவசாய அடிப்படையிலான தொழில்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் இஆர். இஸாம் ஹாசிம் தெரிவித்தார். பரிவு மிக்க சிலாங்கூர் பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் 801 மீனவர்கள் பயனடைவார்கள் என்றும் ரிம 240,300 ஒதுக்கீடு செய்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார். பெட்ரோனாஸ் மற்றும் ஷெல் ஆகிய பெட்ரோல் நிலையங்களில் பற்றுச்சீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.

” ஒவ்வொரு வட்டார மீனவர் சங்கங்களின் மூலம் இந்த நிதிஉதவிகள் மீனவர்களுக்கு வழங்கப்படும். நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் பொருளாதாரச் சுமையை குறைக்க இத்திட்டம் உதவும். சிலாங்கூர் மாநில நவீன விவசாயம் மற்றும் விவசாய அடிப்படையிலான தொழில்துறை ஆட்சிக்குழு அலுவலகம் இவைகளை மீீீீனவர்களுக்கு கொண்டு சேர்க்க அனைத்து வழிமுறைகளையும் கையாளும்,” என்று நேற்று தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.


Pengarang :