NATIONAL

அன்வார்: நோன்பு பெருநாளை பாதுகாப்பாக கொண்டாடுவோம்; எச்சரிக்கையாக இருங்கள் !!!

ஷா ஆலம், மே 23:

அண்மையில் கோவிட் -19 தொற்று நோய் பரவலைத்  தொடர்ந்து நோன்பு பெருநாளை விழிப்புணர்வு, மிதமான மற்றும் உணர்வுப்பூர்வமாக கொண்டாடுமாறு டத்தோ ஸ்ரீ அன்வார்  இப்ராஹிம் முஸ்லிம்களை கேட்டுக்கொண்டார். நோன்பு பெருநாளில் தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்கும் போது சமூக இடைவெளி மற்றும் முகமூடிகளின் பயன்பாடு தொடர வேண்டும் என்று மக்கள் நீதிக் கட்சியின் (கெஅடிலான்) தலைவருமான அன்வார் கூறினார்.

“கோவிட் -19 நோய் பரவலால் நாம் தொடர்ந்து பாதிக்கப்படுவதால், இந்த ஆண்டின் நோன்பு பெருநாள் கொண்டாட்டங்கள் கடந்த ஆண்டுகளில்  இருந்ததைவிட முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கும். நாம் இதுவரை அனுபவிக்காத ஒரு பெருநாளை இந்த ஆண்டில் நாம் எதிர் நோக்க இருக்கிறோம்,” என்று அவர் இன்று தமது முகநூல்  செய்தியில் தெரிவித்தார். நோன்பு பெருநாள்  என்பது ரமலான் நோன்பை மேற்கொண்ட  பின், தூய மனித நேயத்தை வளர்க்கும்  நற்பண்புகளை கற்பிப்பதோடு, சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன்,” என அவர் கூறினார்.

முதன்முறையாக, மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபிபி) பின்பற்றி நோன்பு பெருநாளை வரவேற்க இருக்கிறார்கள். இதன்படி அவசரகால நிகழ்வுகளைத் தவிர்த்து மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் நடவடிக்கைக்கு தடை மற்றும்  ஒரு நாள் மட்டுமே பெருநாள் கொண்டாட முடியும் என்ற பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி கொண்டாட வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.


Pengarang :