SHAH ALAM, 30 Okt — Presiden PKR Datuk Seri Anwar Ibrahim menyampaikan Program Perbincangan Akademi Zakat (AZKA) bertajuk Peranan Zakat Dalam Menangani Kesenjangan Ekonomi:Satu Analisa Kontemporari di Seminar Antarabangsa Zakat, Wakaf dan Filantropi Islam Kali Ketiga hari ini. Program tersebut dianjurkan oleh AZKA Pusat Pungutan Zakat Majlis Agama Islam Wilayah Persekutuan (PPZ-MAWIP) dengan kerjasama Academy of Contemporary Islamic Studies (ACIS), Universiti Teknologi Mara (UiTM). –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

கல்வி மற்றும் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்க வேண்டும்- அன்வார்

ஷா ஆலம், மே 31:

மக்களிடையே நிலவி வரும் கல்வி மற்றும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மத்திய அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நீதிக் கட்சியின் (கெஅடிலான்) தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். நாடு கோவிட்-19 தொற்று நோயை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் வேளையில், அரசாங்கம் தெளிவான கொள்கைகளை வகுக்காதலால் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

” நாம் கல்வி பயிலும் முறைகளை பற்றி விவாதிக்க வேண்டும். இணையக் கல்வி பற்றி அறிவிக்கிறார்கள். ஆனால், புறநகர் பகுதியில் உள்ள மக்கள் இதனால் பயனடைவார்களா? புறநகர் பகுதியில் இணைய வசதிகள் மிகக் குறைவாக இருக்கும். இந்த நிலையில், வசதி படைத்த மாணவர்கள் , ஏழை மாணவர்களை விட முன்னிலையில் இருப்பார்கள்,” என்று முகநூலில் நேரலை நிகழ்ச்சியில் உரையாற்றும் போது இவ்வாறு அவர் கூறினார்.


Pengarang :