NATIONAL

காலை சந்தை மற்றும் இரவு சந்தை மீண்டும் செயல்பட அரசாங்கம் ஆலோசனை- இஸ்மாயில் சப்ரி

புத்ராஜெயா, மே 31:

காலை சந்தை மற்றும் இரவு சந்தை ஆகியவற்றிற்கு மீண்டும் அனுமதி அளிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். அங்காடி வியாபாரிகள் சங்கம், அரசாங்கத்திடம் மீண்டும் செயல்பட சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பரிந்துரை செய்ய கேட்டுக் கொண்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

” அரசாங்கம் சிறு தொழில் மற்றும் அங்காடி வியாபாரிகள் மீண்டும் காலை சந்தை மற்றும் இரவு சந்தை ஆகியவை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட வேண்டும். ஆகவே, அங்காடி வியாபாரிகள் சங்கம் தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் கலந்து ஆலோசித்து எஸ்ஓபிகளை தயார் செய்ய வேண்டும்,” என்று இன்று புத்ராஜெயா வில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.


Pengarang :