NATIONAL

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை பிகேபிபி காலகட்டத்தில் அதிகரித்துள்ளது- பிளஸ் நிறுவனம்

கோலா லம்பூர், மே 23:

நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) காலகட்டத்தில்  பிளஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் நெடுஞ்சாலைகளில்  வாகனங்கள் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது என பிளஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் பிரிவின் தலைவர் முகமட் யூசுப் அப்துல் அஸிஸ் தெரிவித்தார். நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) கடந்த மார்ச் 18-இல் பிரகடனம் செய்யப்படுவதற்கு முன் ஏறக்குறைய 1.7 மில்லியன் வாகனங்கள் நெடுஞ்சாலைகளை பயன்படுத்தி உள்ளனர் என்றும் ஆனால் பிகேபி காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 500,000 இல் இருந்து 600,000 வரை குறைந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

” ஆனாலும், பிகேபிபி நடைமுறைகளை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பல்வேறு துறைகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டதின் காரணமாக பிளஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்  வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,” என்று பெர்னாமாவிடம் கூறினார். நேற்று மட்டும் ஏறக்குறைய 1 மில்லியன் வாகனங்கள் பிளஸ் நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியதாக நூர் அஸாம் உறுதிப்படுத்தினார்.


Pengarang :