NATIONAL

பதவி மற்றும் ஜிஎல்சி வாய்ப்புகளை நிராகரித்த கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டு அன்வார் பெருமிதம் !!!

ஷா ஆலம், மே 29:

அரசாங்க சார்புடைய நிறுவனங்களில் (ஜிஎல்சி) ஆடம்பர மற்றும் பல்வேறு பதவிகளை வழங்கிய போதிலும் கட்சி கொள்கைகளை பாதுகாப்பதில் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணுகுமுறையை மக்கள் நீதிக் கட்சியின்  (கெஅடிலன்) தலைவர் பெருமிதம் கொண்டார். கட்சியின் கொள்கைகளை கடைப்பிடிப்பதற்காக நல்ல பதவிகள் மற்றும்  வாய்ப்பை நிராகரித்த சில நாடாளுமன்ற  உறுப்பினர்களால் இந்த விடயம் அம்பலமானது என்று டத்தோ ஸ்ரீ அன்வார்  இப்ராஹிம் கூறினார்.

” ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்  அமைச்சராவதற்கு அழைக்கப்பட்டார் என்று சிலர் கூறுகிறார்கள், (ஆனால்) அவர் அந்தக் அழைப்பை நிராகரித்தார். சிலர் ஜிஎல்சியை வழங்கினர். ஆனால் சம்பந்தப்பட்ட அவர் அந்தக் வாய்ப்பை நிராகரித்தார். இதுதான் எனக்கு ஆர்வமாக உள்ளது. நாங்கள் கோவிட் -19 ஐ எதிர்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும்” என்று போர்ட் டிக்சன்  நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார்  இன்று ஒரு நேரடி முகநூல் பதிவில் தெரிவித்தார். அன்வார், அரசாங்கத்தை மாற்ற விரும்பினாலும், அந்தக் கொள்கையை இன்னும் பாதுகாக்க வேண்டும், இது அரசியலில் மிகப்பெரிய சவால் என்று கூறினார்.


Pengarang :