Exco Hal Ehwal Orang Asal, Hee Loy Sian (tengah) menyerahkan sumbangan bersama ADN Tanjong Sepat, Borhan Aman Shah (kiri) pada program Penyampaian Sumbangan Kepada Masyarakat Orang Asal Negeri Selangor di Balai Raya MPKKOA Kampung Orang Asli, Kuala Langat pada 16 Mei 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
SELANGOR

பிகேபிபியை பின்பற்றுங்கள், தஞ்சோங் செப்பாட்டை பச்சை மண்டலமாக தொடர்ந்து இருக்கட்டும்- சட்ட மன்ற உறுப்பினர்

செப்டம்பர், மே 16:

தாஞ்ஜோங் செப்பாட்டை பச்சை  மண்டலமாக அறிவிக்கப்பட்ட  போதிலும்  கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிபந்தனைக்குட்பட்டநடமாடும் கட்டுப்பாட்டு ஆணையை (பிகேபிபி)  தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு பொது மக்களை அதன் சட்டமன்ற உறுப்பினர் ஹாஜி போர்ஹான் அமான் ஷா தெரிவித்தார். தூய்மையான நடைமுறைகளை யாராவது கடைபிடிக்க தவறினால் தொற்று நோய் யாரையும் தாக்கக்கூடும் என்பதால் பச்சை மண்டல நிலையைை யாரும் இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று போர்ஹான் கூறினார்.

” நாம் எதையும் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உங்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும் , எப்போதும் சோப்பு அல்லது கிருமிநாசினிகளால் கைகளை கழுவுங்கள். இதுவரை எங்களுக்கு ஒரு சம்பவமும்  இல்லை. வெளியாட்கள் இங்கு நோயை கொண்டு வருகிறார்களா அல்லது எங்கள் பகுதியை சேர்ந்த மக்கள் கோவிட் -19 க்கு ஆளாகி அவர்கள் நோயை இங்கு கொண்டு வந்து விடுவார்கள்  என்று நாங்கள் கவலைப்படுகிறோம்,” என்று அவர் இன்று தாஞ்ஜோங் செப்பாட் பூர்வக்குடி கிராமத்தில் நடந்த ஒரு  நன்கொடை விழாவில் கூறினார்.

நில பிரச்சினைகள், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பூர்வக்குடி உரிமைகள் குறித்து மாநில அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது என்றார். பல்வேறு தரப்பினரை தவறாக வழிநடத்தக்கூடும் என்பதால் போலி செய்திகளை சமூக தளங்களில் எளிதில் பரப்ப வேண்டாம் என்றும் உள்ளூர் மக்களை எச்சரித்தார். இதற்கு  முன்னதாக, இரண்டு கிராமங்களில் உள்ள கிட்டத்தட்ட 600 குடும்பங்களுக்கு மாநில  பூர்வீக விவகாரங்களின் ஆட்சிக்குழு உறுப்பினர்  ஹீ லோய் சான் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் என்பதுகுறிப்பிடத்தக்கது.


Pengarang :