KUCHING, 31 Mac — Anggota Bomba dan Penyelamat Sarawak menjalankan proses penyahkuman atau disinfeksi di sekitar Bandaraya Kuching pada hari kedua program sanitasi awam COVID-19 yang bertujuan untuk membantu Kementerian Kesihatan Malaysia di kawasan yang menjadi tumpuan orang awam. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

பிகேபிபி காலகட்டத்திற்கு பிறகும் கிருமி நாசினி தெளிக்கப்படும் நடவடிக்கைகள் தொடரும்- தீயணைப்புப் படை

புத்ராஜெயா, மே 23:

தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் (ஜெபிபிஎம்) நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) காலகட்டத்திற்கு பிறகும் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்படும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் என ஜெபிபிஎம்-இன் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ஹாம்டான் வாஹீட் தெரிவித்தார். சுகாதார அமைச்சு அடையாளம் காணப்பட்ட கோவிட்-19 ஆபத்தை எதிர் நோக்கியுள்ள கட்டிடங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது என்றார்.

” தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் கோவிட்-19 தொற்று நோய் ஆபத்து என கண்டறியப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்,” என்று கோவிட்-19 நோய் பரவலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் முன் வரிசை பணியாளர்களுடன் நடைபெற்ற நேரலை காணோளியில் இவ்வாறு முகமட் ஹாம்டான் வாஹீட் தெரிவித்தார்.


Pengarang :