Sumber: Arkib
NATIONAL

முடித்திருத்தும் நிலையங்கள் அனுமதிக்கப்படும் எஸ்ஓபிகளை அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது- இஸ்மாயில் சப்ரி

புத்ராஜெயா, மே 21:

நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணையின் (பிகேபிபி) போது முடித்திருத்தும் கடைகளை திறப்பது தொடர்பான சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று தெரிவித்தார். முடித்திருத்தும் சங்கத்தின் பரிந்துரைகளை அரசாங்கம் இன்னமும் ஆய்வு நடத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். கோவிட்-19 தொற்று நோய் பரவலை தடுக்க முழுமையான பாதுகாப்பு எஸ்ஓபி நடவடிக்கைகளை முடிவு செய்த பிறகே முடிதிருத்தும் நிலையங்களை செயல் பட அனுமதி அளிக்க முடியும் என்று இஸ்மாயில் சப்ரி இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு அவர் பேசினார்.

” பலர் இன்னமும் முடிதிருத்தும் நிலையங்களுக்கு சென்று முடி வெட்டுவதற்கு பயப்படுகிறார்கள். சமூக இடைவெளி மற்றும் தொடுவது தொடர்பில் பல்வேறு சர்ச்சைகளை இது கிளப்பியுள்ளது. ஆகவே, தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் மலேசிய சுகாதார அமைச்சு ஆகியவை முடிதிருத்தும் நிலையங்கள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு எஸ்ஓபிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். பல விதமான முடிதிருத்தும் நிலையங்கள் உள்ளன. சில கடைகள் பேரங்காடிகளில் அமைந்துள்ளது, சில ‘மாமாக்’ கடைகளுக்கு அருகில் உள்ளது. ஆகவே, மிகச் சிறந்த எஸ்ஓபிகளை நாம் ஏற்படுத்த வேண்டும்,” என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.


Pengarang :