PBTSELANGOR

எம்டிகெஎஸ் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்துகள் பல்வேறு எஸ்ஓபிகளை பின்பற்றி நாளை செயல்படும்- எங் ஸீ ஹான்

ஷா ஆலம், ஜூன் 10:

கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றத்தின்  (எம்.டி.கே.எஸ்) அனுசரணையில் சிலாங்கூர் ஸ்மார்ட் பேருந்து ஒரு நாளைக்கு 20 பயணிகள் உட்பட இன்னும் கடுமையான சீரான செயலாக்க  நடைமுறைகளுடன் (எஸ்ஓபி) நாளை இயங்க தொடங்கும். பயணிகள் முகமூடிகள் அணிய ஊக்குவிக்கப்படுவதாகவும், பஸ் நுழைவாயிலில் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும் என்றும் எம்டிகேஎஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

” பேருந்தில் வழங்கப்பட்ட கிருமிநாசினி திரவத்தைப் பயன்படுத்தி, அவர்கள் பேருந்திலோ அல்லது நிறுத்தத்திலோ ஒரு மீட்டர் சமூகஇடைவெளியை பின்பற்ற வேண்டும். பேருந்து நிறுவனங்கள்  இருக்கையை குறியீடு வைக்க வேண்டும். கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை பயணிகள் பின்பற்ற வேண்டும்,” என்று போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் எங் ஸீ ஹான்  கூறினார்.

கோவிட் -19 நோய் பரவலை தொடர்ந்து நடமாடும்  கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சிலாங்கூர் ஸ்மார்ட் பேருந்து சேவை மற்றும் பி.ஜே. இந்த சேவையை இடைநிறுத்தியதில் 43 சிலாங்கூர் ஸ்மார்ட் பஸ் வழித்தடங்களில் 138 பேருந்துகள் மற்றும் ஆறு வழித்தடங்கள் சம்பந்தப்பட்ட 32 பிஜே.சிட்டி பஸ் 32 பேருந்துகள் சேவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Pengarang :