Timbalan Yang Dipertua MPK, Elya Marini Darmin pada sidang akhbar selepas
PBTSELANGOR

கம்போடியர்கள் நடத்தும் சட்ட விரோத இரவுச் சந்தையை எம்பிகே கண்காணிக்கும் !!!

கிள்ளான், ஜூன் 30:

சுல்தான் சுலைமான் நகரத்தில் சட்ட விரோதமாக நடத்தப்பட்டு வரும் இரவுச் சந்தையை கிள்ளான் நகராண்மை கழகத்தின் (எம்பிகே) அமலாக்க அதிகாரிகள் பணியில் அமர்த்தப் படுவார்கள் என எம்பிகேவின் துணைத் தலைவர் எல்யா மாரினி டார்மின் கூறினார். கம்போடியா நாட்டவர்கள் நடத்தி வரும் இரவுச் சந்தை மீது பொது மக்கள் புகார் செய்ததன் அடிப்படையில் எம்பிகே நடவடிக்கையில் இறங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

” இந்த சட்ட விரோத இரவுச் சந்தை நடவடிக்கையினால் இந்த வட்டாரத்தில்  சுற்றி அசுத்தமாக உள்ளது. கால்வாய்கள் குப்பைகளால் அடைத்துள்ளது. சட்ட விரோத இரவுச் சந்தையை முறியடிக்க அமலாக்க அதிகாரிகளை பணியில் அமர்த்தப் பட்டுள்ளார்கள். மேலும் இது தொடர்ந்து செயல்பட்டு வந்தால் எம்பிகே கடுமையான நடவடிக்கை எடுக்கும்,” என்று எம்பிகே தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.


Pengarang :