NATIONAL

குறுகிய கால பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை பிரதமர் அறிவிப்பார்- நிதியமைச்சர்

புத்ராஜெயா, ஜூன் 2:

பிரதமர் டான் ஶ்ரீ முஹீடின் யாசின் இம்மாதம் ஜூன் மாதம் தொடங்கி டிசம்பர் வரையிலான குறுகிய கால பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை அறிவிக்க இருக்கிறார் என மலேசிய நிதியமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஸப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் தெரிவித்தார். மக்களை மேம்படுத்துதல், வணிகத்தை வலுப்படுத்துதல் மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவித்தல் ஆகிய மூன்று அம்சங்களை இத்திட்டம் உட்படுத்தி இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

இத்திட்டத்தை வரைவதில், அரசாங்கம், விவேகமான செயல்பாடுகள், பொது மற்றும் தனியார் துறைகளுக்கான ஒத்துழைப்புக்கு முன்னுரிமை, முழுமையான மற்றும் விரிவான தொடர்பு அலையை உறுதிப்படுத்துதல், தரவு அடிப்படையிலான அணுகுமுறைப் பின்பற்றுதல் ஆகிய நான்கு முக்கிய கூறுகளைச் சார்ந்திருக்கும் என்று தெங்கு டத்தோ ஶ்ரீ சாஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் குறிப்பிட்டார்.

இன்று செவ்வாய்க்கிழமை பரிவுமிக்க பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் குறித்த ஏழாவது அறிக்கையை முகநூல் வாயிலாக வெளியிட்டபோது, தெங்கு சாஃப்ருல் இதனைக் கூறினார். கொவிட்-19 நோயினால் ஏற்பட்ட சுகாதாரம் மற்றும் பொருளாதார தாக்கத்தை கையாள்வதில், அரசாங்கம் திட்டமிட்டிருக்கும் ஆறு கட்டங்களில், இத்திட்டம் நான்காவது கட்டமாகும்.

— பெர்னாமா


Pengarang :