KUALA LUMPUR, 16 April — Sebahagian individu warga tempatan yang dikuarantin sementara melambaikan tangan tanda sokongan kepada barisan hadapan yang bertugas untuk COVID-19 dan Kerajaan Malaysia ketika tinjauan di Impiana Hotel pada program ‘Thumb to Malaysia ‘ malam ini. Impiana hotel antara lokasi yang digazetkan kerajaan bagi menempatkan individu yang perlu menjalani saringan COVID- 19. Seramai 500 orang yang baru pulang dari luar negara ditempatkan sementara bagi saringan COVID-19. — fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

கோவிட்-19: இரண்டு புதிய சம்பவங்கள், 20 நோயாளிகள் குணமடைந்தனர்

புத்ராஜெயா, ஜூன் 30:

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,639 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 2 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை. இதுவரையிலான மரண எண்ணிக்கை 121-ஆகவே உள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.

இன்றைய  நிலையில் 4 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இவர்களில் ஒருவர்  சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இன்று 20 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,354 உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 96.7 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் கூறினார்.


Pengarang :