Perdana Menteri ketika sidang video bersama Menteri Kanan Pertahanan Datuk Seri Ismail Sabri Yaakob dan Ketua Pengarah Kesihatan Datuk Dr Noor Hisham Abdullah tengah hari tadi berkenaan perkembangan terkini situasi Covid-19 di Malaysia. – Foto Facebook Muhyiddin Yassin
NATIONAL

கோவிட்-19 சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இயற்றப்படும்- பிரதமர்

புத்ராஜெயா, ஜூன் 6:

கொவிட் 19 நோயினால் ஏற்பட்டிருக்கும் சட்ட அடிப்படையிலான தாக்கங்களைக் குறைக்கும் முயற்சியில், அரசாங்கம் தற்காலிக நடவடிக்கையாக கொவிட் 19 சட்ட மசோதாவை இயற்றவிருக்கிறது.

இச்சட்ட மசோதா வரும் ஜூலை மாதத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக பிரதமர்  டான் ஶ்ரீ முகிடின் யாசின் தெரிவித்திருக்கிறார்.

இந்த சட்ட மசோதா, நிர்ணயிக்கப்பட்ட ஒரு காலக்கட்டத்திற்கு, ஒப்பந்த பொறுப்பிலிருந்து ஒரு தற்காலிக நிவாரணமாக அமையும் என்று அவர் கூறினார்.

இப்புதியச் சட்டத்தின்வழி, மலேசிய மக்களின் இயல்பு வாழ்க்கை பொதுவாகவே தொடர முடியும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

— பெர்னாமா


Pengarang :