KUALA LANGAT, 1 Jun — Petugas dari Pejabat Kesihatan Kuala Langat mengambil sampel saringan COVID-19 ke atas seorang warga asing di Pangsapuri Langat Utama, hari ini. Saringan COVID-19 ini dilakukan di dua lokasi di Pangsapuri Kuala Langat Utama dan Pangsapuri Kuala Langat Murni sejak Jumaat lalu. Sehingga hari ini seramai 1,000 warga asing serta penduduk sekitar pangsapuri ini telah menjalani saringan COVID-19 yang dilakukan secara percuma. Seramai 50 petugas dari Pejabat Kesihatan Kuala Langat bertugas sejak empat hari lalu. — fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
RENCANA PILIHANSELANGOR

கோவிட்-19: சிலாங்கூரில் புதிய சம்பவங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது

ஷா ஆலம், ஜூன் 2:

கடந்த இரண்டு நாட்களாக கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது எனவும் நேற்று 11 சம்பவங்களாக இருந்த நிலையில் இன்று ஆறு சம்பவங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு (எஸ்திஎப்சி) டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. இது வரையில் சிலாங்கூர் மாநிலத்தில் மொத்தம் 1,926 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.

” கோவிட்-19 வைரஸ் தொடர்ந்து நம்மிடையே இருந்து வருகிறது. நாம் புதிய பழக்க வழக்கத்தை அமல்படுத்த வேண்டும். இதுவே நமக்கு நல்லது,” என்று எஸ்திஎப்சி கூறியிருக்கிறது. மலேசியாவில் மொத்தம் 7,877 கோவிட்-19 நோய் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Pengarang :