Relatives attend the funeral of a woman who died from coronavirus disease (COVID-19), as Italy struggles to contain the spread of coronavirus disease (COVID-19), in Seriate, Italy March 28, 2020. REUTERS/Flavio Lo Scalzo
ANTARABANGSARENCANA PILIHAN

கோவிட்-19 நோயினால் உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை 400,000-ஐ தாண்டியது !!!

உலகம், ஜூன் 9:

கோவிட்-19 தொற்று நோயினால் உலகளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 400,000- ஐத் தாண்டியுள்ளது. மேலும் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 6.9 மில்லியனைத் தாண்டியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. உலகளவில் இறப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 3,469 அதிகரித்து 400,857- ஆக அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று மட்டும் இந்த தொற்றினால் பாதிப்புற்றவர்களின் எண்ணிக்கை 131,296 பேராக அதிகரித்து உலகளவில் 6,931,000 பாதிப்புகள் பதிவிடப்பட்டுள்ளன. அமெரிக்காவில் பெரும்பாலான தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 3,311,387 பேர் இந்த தொற்றுக்கு ஆளாகி இருக்கும் நிலையில், 181,804 பேர் இறந்துள்ளனர்.


Pengarang :