PUTRAJAYA, 25 Mei — Ketua Pengarah Kesihatan Datuk Dr Noor Hisham Abdullah (kanan) bercakap pada sidang media harian berkaitan jangkitan COVID-19 di Kementerian Kesihatan hari ini.?Turut sama Timbalan Ketua Pengarah Kesihatan (Perubatan) Datuk Dr Rohaizat Yon (dua, kiri) dan Ketua Bahagian Kawalan Penyakit, Dr Norhayati Rusli (kiri).?–fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA?
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 10 நாட்களாக எந்த மரணமும் ஏற்படவில்லை, புதிய சம்பவங்கள் 38 !!!

புத்ராஜெயா, ஜூன் 1:

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,857 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 38 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை. கடந்த மே 23 தொடங்கி 10 நாட்களாக இதுவரையில் மரணம் ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து  மரண எண்ணிக்கை 115-ஆகவே உள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.

இன்றைய  நிலையில் 8 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இவர்களில் 2 பேர்கள் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று 51 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,404 உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 81.55 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் கூறினார்.

 


Pengarang :