NATIONALRENCANA PILIHANSELANGOR

தாமான் லங்காட் முர்னியில் பிகேபிடி அமல்படுத்தப்பட்டது !!!

பந்திங், ஜூன் 3:

கோலா லங்காட், தாமான் லங்காட் முர்னியில் கொவிட்-19 சம்பவம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கடுமையாக்கப்பட்ட  நடமாடும் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபிடி)  அமல்படுத்தப்படுகிறது. தினசரி பணிகளுக்கு வெளியில் செல்வதற்கும் மீண்டும் திரும்புவதற்கும் அனுமதி வழங்கப்பட்டாலும், அங்குள்ள மக்கள், சுகாதாரப் பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.
புத்ராஜெயாவில், புதன்கிழமை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடர்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இஸ்மாயில் சப்ரி இத்தகவல்களைக் கூறினார்.

இதற்கு முன்னர், அப்பகுதியில் அரசாங்கம் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தியிருப்பதாக தகவல் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.  அப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட அந்நிய நாட்டவருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, நேற்று, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, போலீசாரும் ராணுவத்தினரும், அப்பகுதியைச் சுற்றி முள்வேளி போட்டுக் கொண்டிருந்ததைத் தொடர்ந்து அச்செய்தி வெளியாகியது.

— பெர்னாமா


Pengarang :