Sebuah restoran di Seksyen 19, Shah Alam diarah tutup serta-merta akibat ingkar Perintah Kawalan Pergerakan Bersyarat dalam Operasi Pemantauan Kedai Makan dan Restoran oleh MBSA bersama polis pada 2 Jun 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
SELANGOR

சிலாங்கூரில் எஸ்ஓபிகளை பின்பற்றத் தவறிய வணிகத் தளங்களை மூட உத்தரவு !!!

ஷா ஆலம், ஜூன் 5:

மாநிலத்தில் மூடப்பட்ட வணிகத் தளங்களில் பெரும்பாலானவை தேசிய பாதுகாப்பு மன்றத்தின் (எம்கேஎன்) சீரான செயலாக்க  நடைமுறையை (எஸ்ஓபி) பின்பற்றவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது என சிலாங்கூர் மாநில சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் ஷாரி ஙாடிமான் தெரிவித்தார். வணிக வளாகத்தில் வாடிக்கையாளர் வரவுகளை பதிவு செய்யத் தவறவிட்டது, தொழிலாளர்கள் முகமூடி அணியாதது மற்றும் சமூகஇடைவெளியை அமல்படுத்தாதது ஆகியவை இவற்றில் அடங்கும் என்றார்.

கடந்த செவ்வாயன்று, இங்குள்ள செக்சன் 13 இல் உள்ள சூப்பர் மார்க்கெட் சிலாங்கூரில் எஸ்ஓபியை பின்பற்றாத மூடப்பட்ட முதல் வணிக வளாகமாக மாறியது. இன்று, கிள்ளானில் உள்ள மேரு சந்தை வளாகம் வெப்பநிலை சோதனைகள் மற்றும் சமூக இடைவெளி போன்ற நடைமுறைகளை பின்பற்றத் தவறியதால் மூட உத்தரவிடப்பட்டது.


Pengarang :