Murid
NATIONALRENCANA PILIHAN

பள்ளிகள் மீண்டும் செயல்படுவதற்கான எஸ்ஓபி நாளை வெளியாகும்- கல்வி அமைச்சர்

புத்ராஜெயா, ஜூன் 3:

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான நிர்வாக வழிகாட்டி நாளை, வியாழக்கிழமை முதல், வெளியிடப்படும். பள்ளிகளில் மாணவர்களின் நடமாட்டம் குறித்து தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சுடன் இணைந்து துல்லியமாக ஆராய்ந்தப் பின்னர் இந்த வழிகாட்டி வெளியிடப்படுவதாக கல்வி அமைச்சர் டாக்டர் முஹமட் ரட்சி ஜுடின் தெரிவித்திருக்கிறார்.

இந்த வழிகாட்டி மூலம், பள்ளி நிர்வாகமும், ஆசியர்களும், பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னர் தேவையான ஏற்பாடுகளைச் செய்யக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார். பள்ளிகள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் வழிகாட்டியை, முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய மாநில கல்வித் துறை மற்றும் மாவட்ட கல்வி இலாகா தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பிள்ளைகளைப் பள்ளிக்குத் திரும்ப அனுப்புவதற்கு பெற்றோர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், பிள்ளைகள் தொடுகை இடைவெளி போன்ற விதிமுறைகளைப் பின்பற்றுவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில் பள்ளி மீண்டும் திறக்கப்படுவது குறித்து தமது தரப்பு சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் இணைந்து பேச்சுகள் நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும், ஐந்தாம் மற்றும் ஆறாம் படிவ மாணவர்களை உட்படுத்திய இடைநிலைப்பள்ளிகள் மட்டுமே மீண்டும் திறக்கப்படவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

— பெர்னாமா


Pengarang :