NATIONAL

மெப்ஸ் பணப் பட்டுவாடா சேவைக் கட்டணம் இல்லை- இஸ்மாயில் சப்ரி

புத்ராஜெயா, ஜூன் 1:

நாடு முழுமையிலும் செயல்படும் மெப்ஸ் பணப் பட்டுவாடா இயந்திரத்தில் பணத்தை மீட்டுக் கொள்வதற்காக வசூலிக்கப்படும் ஒரு ரிங்கிட் கட்டணத்தை அரசாங்கம் அகற்றியிருந்தது. அச்சலுகை, நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிகேபிபி காலக்கட்டமான ஜூன் 9-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

ஏப்ரல் 6-ஆம் தேதி வரை, அமல்படுத்தப்பட்டு வரும் இச்சலுகையை மாற்றக் கோரி, வங்கி தரப்புகளிடம் இருந்து எந்தவொரு கலந்துரையாடலோ விண்ணப்பமோ கிடைக்கப்பெறவில்லை என்றும் இஸ்மாயில் சப்ரி சுட்டிக் காட்டினார். திங்கட்கிழமை, புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இஸ்மாயில் சப்ரி இதனைத் தெரிவித்தார்.

 


Pengarang :