Yang Dipertua MPK, Dr Ahmad Fadzli Ahmad Tajuddin berucap pada sidang media di Majlis Perbandaran Klang pada 17 JUN 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
PBTRENCANA PILIHANSELANGOR

வணிக வளாகங்களை அந்நியர்கள் நிர்வகித்தால், உரிமையாளர்களை கருப்பு பட்டியலிடப் படுவர் !!!

கிள்ளான், ஜூன் 30:

அந்நிய நாட்டவர்களுக்கு தங்களது வணிகத் தளங்களை நிர்வகிக்க அனுமதி அளிக்கும் உள்ளூர் வணிகர்களை கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று கிள்ளான் நகராண்மை கழகத்தின் (எம்பிகே) தலைவர் டாக்டர் அமாட் ஃபாஸ்லி அமாட் தாஜுடின் கூறினார். வணிகர்கள் இந்தத் தவறைச் செய்தால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வணிகம் செய்வதில் இருந்து தடுக்கப் படுவார்கள் என்று அவர் எச்சரித்துள்ளார்.

” தற்போது நாங்கள் தகுந்த தண்டனைகளை ஆராய்ந்து வருகிறோம். ஏற்கனவே, இந்த தவறுகளை செய்யும் போது, சம்பந்தப்பட்ட வணிகர்களின் வணிக உரிமங்களை ரத்து செய்யப்படும். ஒவ்வொரு முறையும் உரிமங்கள் ரத்து செய்யப்படும் போது இவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்து வணிகத்தை தொடர்கிறார்கள்,” என்று இன்று எம்பிகேவின் முழுமையான கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார்.


Pengarang :