NATIONAL

அல்-ஜஸிரா: நான்கு நபர்களை வாக்குமூலம் பதிவு செய்ய புக்கிட் அமான் அழைத்தது

கோலா லம்பூர், ஜூலை 10:

அல்-ஜஸிரா செய்தி நிறுவனத்தின் நான்கு பணியாளர்களை புக்கிட் அமான் இன்று அழைத்து கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தை எதிர் கொள்ளும் போது அந்நிய நாட்டவர்களை நடத்திய விதம் குறித்து வெளியிட்ட காணோளி தொடர்பில்  வாக்குமூலம் பதிவு செய்தது என புக்கிட் அமான் குற்றவியல் விசாரணை பிரிவின் (விசாரணை/சட்டம்) துணை இயக்குநர் டிசிபி மியோர் ஃபாரிடாலாத்ராஷ் வாஹீட் தெரிவித்தார். அல்-ஜஸிரா செய்தி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி மற்றும் செய்தியாளர்களை விசாரணைக்கு உதவ அழைத்தாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்கண்ட அனைவரும் ஏழு வழக்கறிஞர்களுடன் காலை 8.50 மணிக்கு புக்கிட் அமானுக்கு வந்தனர், இருந்தாலும், அவர்கள் செய்தியாளர்களிடம் பேச மறுத்தனர். இந்த வழக்கு செக்சன் 4(1) அவதூறு சட்டம் 1948 மற்றும் செக்சன் 500 குற்றவியல் சட்டத்தின் கீழ் அவதூறு செய்தியை வெளியிட்டது, செக்சன் 233 தொடர்பு மற்றும் பல்லுடக சட்டம் 1998 கீழ் தொலைத்தொடர்பு சேவையை தவறுதலாக பயன்படுத்தியது ஆகியவை அடங்கும் என்றார் அவர்.


Pengarang :