Pengangguran berlaku dalam kalangan pekerja industri binaan kerana projek terpaksa dihentikan ketika PKP.
NATIONAL

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 60,000-க்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்- மனிதவள அமைச்சர்

தாப்பா, ஜூலை 25:

இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி பல்வேறு தொழில்துறைகளில் இருந்து  ஏறக்குறைய 64,495 பேர்கள் வேலை இழந்துள்ளனர் என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார். சமூக பாதுகாப்பு அமைப்பின் (சொக்சோ) வேலை காப்புறுதி திட்ட அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறினார். அதில், வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் மற்றும் பயிற்சிகள் உதவி ஆகியவை அடங்கும் என்றும் கடந்த ஜூன் 15 தொடங்கி வேலை இயிழந்தவர்களுக்கு உதவி செய்துள்ளதாக கூறினார்.

” கடந்த ஜூலை 23 வரையில் மொத்தம் 16,198 நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பங்கேற்றுள்ளனர். இதில் 2,240 நிறுவனங்கள் மொத்தம் 6,928 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி உள்ளது,” என்று சரவணன் தெரிவித்தார்.


Pengarang :