ADN Kampung Tunku, Lim Yi Wei bercakap kepada media ketika Lawatan ke rumah Datuk Ooi Eow Jin di Taman Sea, Petaling Jaya pada 27 Jun 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
SELANGOR

கம்போங் துங்கு சட்டமன்ற பெடுலி சேஹாட் திட்டத்தின் பதிவு தொடங்கியது !!!

ஷா ஆலம், ஜூலை 14:

கம்போங் துங்கு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர்கள் நேற்று தொடங்கி ஜூலை 31 வரை பெடுலி சேஹாட் திட்டத்தில் பதிந்து கொள்ளலாம் என்று அதன் சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வேய் கூறினார். இணையத்தில் https://member.pedulisihat.com/site/createMember அல்லது நேரிடையாக சட்டமன்ற சேவை மையத்தில் சென்று பதிந்து கொள்ள முடியும் என தமது முகநூலில் யீ வேய் தெரிவித்தார்.

சட்டமன்ற சேவை மையத்தில் பதியும் வாக்காளர்கள் பின்வரும் ஆவணங்களை கொண்டு வர வேண்டும்:-

1. பெடுலி சேஹாட் திட்டத்தின் பாரம்

2. அடையாள அட்டைநகல், மைகிட் அல்லது பிறப்பு பத்திரம்

3. சம்பள அறிக்கை/ ஓய்வூதிய அறிக்கை

4. ஈஏ பாரம்/ இபிஎப் அறிக்கை

5. இறப்பு சான்றிதழ்/ விவாகரத்து சான்றிதழ் (தனித்து வாழும் தாய்மார்கள்)

இது கம்போங் துங்கு சட்டமன்ற வாக்காளர்களுக்கு மட்டுமே.


Pengarang :