Pengunjung Taman Tasik Shah Alam Seksyen 3 mematuhi tatacara operasi piawai sewaktu beriadah dengan mengamalkan penjarakan sosial bagi mencegah penularan Covid-19 ketika tinjauan pada 26 Mei 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

கோவிட்-19: சிலாங்கூர் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; எஸ்ஓபியை பின்பற்றுங்கள் !!!

ஷா ஆலம், ஜூலை 14:

கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் தொடர்ந்து குறைந்தாலும் சிலாங்கூர் வாழ் பொது மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் தொடர்ந்து சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றி நடக்க வேண்டும் என்று சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பு பணிக்குழு (எஸ்திஎப்சி) கூறியது. இன்று ஒரு சம்பவம் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, இது வரையில் மொத்தம் 2,093 சம்பவங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

” சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் தொடர்ந்து குறைந்து வந்தாலும் உயிர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. சமூக இடைவெளியை அமல்படுத்துங்கள். உடல் சுகாதாரத்தை பேண வேண்டும். முகமூடிகளை அணிய வேண்டும். மேலும் செலாங்கா செயலியை பயன்படுத்துங்கள்,” என்று எஸ்திஎப்சி தமது முகநூலில் பதிவு செய்துள்ளது

 


Pengarang :