PUTRAJAYA, 28 April — Ketua Pengarah Kesihatan Datuk Dr Noor Hisham Abdullah pada sidang media harian berkaitan jangkitan COVID-19 di Kementerian Kesihatan hari ini.?– fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA?
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 18 புதிய சம்பவங்கள், மூன்று நோயாளிகள் குணமடைந்தனர் !!!

புத்ராஜெயா, ஜூலை 17:

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,755 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 18 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை. இதுவரையிலான மரண எண்ணிக்கை 122-ஆகவே உள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.

இன்றைய  நிலையில் 3 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். மேலும், இன்று 3 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,541 உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 97.6 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் கூறினார்.


Pengarang :