NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 26 நாட்களுக்கு பிறகு முதல் இறப்பு சம்பவம்

புத்ராஜெயா, ஜூலை 11:

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,704 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 8 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 26 நாட்களுக்கு பிறகு இன்று ஒரு  மரணம் ஏற்பட்டுள்ளது. இதுவரையிலான மரண எண்ணிக்கை 122-ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.

இன்றைய  நிலையில் 2 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். மேலும், இன்று 4 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,515 உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 97.7 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் கூறினார்.


Pengarang :