NATIONAL

சினி இடைத்தேர்தல் புதிய எஸ்ஓபிகளை பின்பற்றி நடந்தேறியது !!!

பெக்கான், ஜூலை 4:

சினி சட்டமன்ற இடைத்தேர்தலில், தேர்தல் பொறுப்பாண்மைக்குழு நிர்ணயத்திருக்கும் செயல்பாட்டு தரவிதிமுறை சிறப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. கொவிட்-19 பெருந்தொற்று பரவாமல் இருப்பதை உறுதிச் செய்யவதற்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் எஸ்ஓபியை வாக்களர்கள் முறையே பின்பற்றி இருப்பது மனநிறைவு அளிப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன்னதாக நடைபெற்ற இடைத்தேர்தல்களைக் காட்டிலும், சினி சட்டமன்ற இடைத்தேர்தல் வித்தியாசமானது. எனினும், இக்காலக்கட்டத்திலும், பெரும்பாலான வாக்காளர்கள் தங்களின் கடமைகளை நிறைவேற்றுவதில் இருந்து தவறவில்லை என்று அவர் குறிப்பிட்டார். பகாங், ஃபெல்டா சினி மூன்றில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இஸ்மாயில் இதனைத் தெரிவித்தார். இதனிடையே, வெளிநாட்டு மக்களுக்காக நாட்டின் எல்லைப்பகுதி தற்போது திறக்கப்படாது என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக அவர் தெளிவுப்படுத்தினார்.

— பெர்னாமா


Pengarang :