Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari dan ADN Kota Damansara Shatiri beramah mesra bersama sukarelawan Team Selangor pada program Edaran Beg Makanan TS Cares Siri-3 di Dewan MPBJ Seksyen 2, Kota Damansara pada 4 Julai 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் கேர்ஸ் குழுவினர் 3,000 குடும்பத்தினரின் சுமையை குறைக்க உதவினர்- மந்திரி பெசார்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 4:

கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 குடும்பத்தினரின் சுமையை குறைக்க தீம் சிலாங்கூர் கேர்ஸ் (திஎஸ்) உதவியதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். சிலாங்கூர் மாநில அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என அவர் விளக்கினார். ஜஸ்மீன் ஃபூட் கோப்ரேஷன் நிறுவனம், நெஸ்லே, அடாபி கொன்சுயூமர் மற்றும் கோக்கோலேண்ட் இண்டஸ்திரி ஆகிய நிறுவனங்கள் இதில் அடங்கும் என்றார் அவர்.

” நடமாடும் கட்டுபாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் சிலாங்கூர் மாநிலத்தில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ துணைப் புரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று திஎஸ் கேர்ஸ் நிகழ்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு அமிருடின் ஷாரி பேசினார்.


Pengarang :