RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் பேரிடர் பிரிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பகுதிகளை கண்காணிக்கும் !!!

ஷா ஆலம், ஜூலை 12:

சிலாங்கூர் மாநில பேரிடர் நிர்வாகப் பிரிவு தொடர்ந்து வானிலை மாற்றங்களை கண்காணித்து வருவதாகவும் மலேசிய வானிலை ஆய்வுத்துறை வெளியிடும் எச்சரிக்கைகளை பின்பற்றி வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களை எதிர் கொள்ள தயாராக உள்ளது என்று அதன் பிரிவின் தலைவர் அமாட் ஃபைரூஸ் முகமட் யூசுப் தெரிவித்தார். மாவட்ட அதிகாரி, ஊராட்சி மன்றங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகிய அரசாங்க இலாகாகள் சரியான முறையில் தொடர்பு கொண்டு அந்தந்த பகுதிகளில் ஏற்படும் பேரிடர் சம்பவங்களை எதிர் கொள்ள வேண்டும் என அவர் நினைவு படுத்தினார்.

” வெள்ளப் பகுதிகள், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் நடக்கும் இடங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். இருந்தாலும் மற்ற இடங்களை கண்காணிக்காமல் அலட்சியமாக இருக்காதீர்கள்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார். கண்காணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் வேளையில், சம்பந்தப்பட்ட இலாகாகளிடம் நிலைமையை எடுத்து வைத்து சரியான தீர்வு எடுக்கப்படும் என்று அமாட் ஃபைரூஸ் கூறினார்.


Pengarang :