Tr
SELANGOR

சிலாங்கூர் மற்றும் கோலா லம்பூரில் குடிநீர் தடை

கோலா லம்பூர், ஜூலை 6:

ஜூலை 14 தொடங்கி 17-ஆம் தேதி வரை, பெட்டாலிங், கிள்ளான், கோம்பாக், கோலாலம்பூர் மற்றும் கோலா லங்காட் ஆகிய இடங்களை உட்படுத்திய 290 பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுங்கை சிலாங்கூர் மூன்றாம் கட்ட நீர் சுத்திகரிப்பு ஆலையில் மேற்கொள்ளவிருக்கும் சீரமைப்பு பணிகள் காரணமாக, இந்நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று ஆயிர் சிலாங்கூர் நிர்வாக இயக்குநரும் பொறியியளாலருமான அபாஸ் அப்துல்லா கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஏற்ப நீர் விநியோகத் தடையும் அதன் சீரமைப்பும் பொது மக்கள் வசிக்கும் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும் என்று .அபாஸ் தெரிவித்தார்.  இதில், 422,000 பயனீட்டாளர்கள் பாதிப்படைவதாக கூறப்படும் நிலையில், அப்பகுதிகளைச் சார்ந்த மக்கள் சிரமம் அடையாமல் இருக்க 91 டாங்கிகளின் மூலம் நீர் விநியோகம் செய்யப்படுவதாகும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, மருத்துவமனை மற்றும் வியாபார வளாங்களில் நீர் வசதி செய்து தரப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

17-ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிறகு, நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் தேவையான நீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஆயிர் சிலாங்கூர் நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த முழு விபரங்களைத் தெரிந்துக்கொள்ள www.airselangor.com என்ற அகப்பக்கத்தை நாடலாம்.

— பெர்னாமா


Pengarang :