NATIONAL

திடீர் பொதுத் தேர்தல் நடந்தால், பாக்காத்தான் மாநில சட்ட மன்றங்கள் கலைக்கப்படாது !!!

ஷா ஆலம், ஜூலை 6:

ஐந்தாண்டு காலத்திற்கு முன்பாக பொதுத் தேர்தல் நடந்தால் பாக்காத்தான் ஹாராப்பான் ஆளும் மாநில சட்ட மன்றங்கள் கலைக்கப்படாது என்று பாக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சியின் தலைவர் மாட் சாபு மற்றும் ஜனநாயக செயல் கட்சியின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கூட்டாக கையொப்பம் இட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள். கோவிட்-19 நோய் தாக்கத்திற்கு பிறகு நாட்டு மக்களுக்கு உதவிகள் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

” திடீர் என பொதுத் தேர்தல் நடந்தால் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி ஆளும் மாநில சட்ட மன்றங்கள் கலைக்கப்படாது. பாக்காத்தான் மாநில அரசாங்கங்கள் தொடர்ந்து செயல்படும்,” என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


Pengarang :