Ng Suee Lim melakukan saringan Covid-19 di Bangunan Annex, Shah Alam pada 7 Julai 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
SELANGOR

துணை சபாநாயகராக மகளிரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்- எங் சுவி லிம்

ஷா ஆலம், ஜூலை 7:

காலியாக இருக்கும் சிலாங்கூர் மாநில சட்டசபை துணை சபாநாயகராக மகளிர் ஒருவரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சபாநாயகர் லிம் சுவி லிம் மாநில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மகளிருக்கான 30% ஒதுக்கீடு மாநில அளவில் எல்லா முடிவு செய்யும் அதிகாரம் உள்ள பதவிகளுக்கு அடங்கும் என்றார் அவர்.

” என்னிடம் கேட்டால், கண்டிப்பாக காலியாகி இருக்கும் துணை சபாநாயகர் பதவி மகளிருக்கு வழங்க வேண்டும். இதுவே மகளிரின் அர்ப்பணிப்பை மதிக்கும் மாநில அரசாங்கத்தின் கொள்கையாகும்,” என்று என்னெக்ஸ் கட்டிட வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு சுவி லிம்  கூறினார்.

பாக்காத்தான் அரசாங்கம், கடந்த 2008-இல் இருந்து மகளிருக்கு சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவிகளை வழங்கி வந்தது. இது மகளிருக்கான ஒரு அங்கீகாரம் ஆகும். கடந்த 2013-இல் தற்போது செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஹானா யியோவை சபாநாயகராக நியமனம் செய்தது. அப்போது ஹானா யியோ சுபாங் ஜெயா சட்ட மன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :