NATIONAL

நாடாளுமன்ற சபாநாயகராக அசார் அஜீசான் ஹாருன் முன்மொழியப் பட்டார் !!!

கோலா லம்பூர், ஜூலை 7:

மலேசிய தேர்தல் ஆணையத்தின் (எஸ்பிஆர்) தலைவர் அசார் அஜீசான் ஹாருனை புதிய சபாநாயகராக நியமிக்க பிரதமர் முகிதீன் யாசின் நோட்டீஸ் அனுப்பியதை சபையின் துணை சபாநாயகர் ஙா கோர் மிங் உறுதிப்படுத்தினார். பாரிசானின் உறுப்பினரும் பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாலினா ஓத்மான் சைட் துணை சபாநாயகராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்றும் ஙா கூறினார்.

இன்று ஒரு சீன செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் அவர் இதை வெளிப்படுத்தினார். இது ஜூலை 13 ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் திட்டமாக இருக்கும் என்று அவர் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டால் அசார் மற்றும் அசாலினா ஆகியோர் தங்களின் நியமனத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று முகிதீன் கூறியுள்ளார்.

அசார் 2018 செப்டம்பர் முதல் தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருந்து வருகிறார். அதே நேரத்தில் அசாலினா, ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததோடு, பாரிசான் நிர்வாகத்தின் போது சட்ட அமைச்சராகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Pengarang :