SEPANG, 10 Jun — Orang ramai melakukan pendaftaran masuk di kaunter sebelum berlepas di Lapangan Terbang Antarabangsa Kuala Lumpur 2 (KLIA2) hari ini. Kerajaan telah membenarkan orang ramai merentas sempadan negeri di bawah Perintah Kawalan Pergerakan Pemulihan (PKPP). –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA?
NATIONAL

நாட்டின் அனைத்துலக எல்லைகளை திறப்பதற்கு இன்னும் முடிவு செய்யவில்லை- இஸ்மாயில் சப்ரி

பெரா, ஜூலை 5:

மலேசிய நாட்டின் அனைத்துலக எல்லைகளை சுற்றுப் பயணிகள் மற்றும் அந்நிய தொழிலாளர்களுக்கும் திறப்பதற்கு முன்பாக பச்சை மண்டலமாக அடையாளம் காணப்பட்டுள்ள நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்  இன்று தெரிவித்தார். இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் பேச்சுவார்த்தையில் இரு வழி பயணங்களும் அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

” இரு நாடுகளும் இதில் பயனடைய வேண்டும். நாம் ஒரு நாட்டிற்கு அனுமதி அளிக்கும் போது, சம்பந்தப்பட்ட நாடும் நமக்கு அந்த நாட்டிற்கு நுழைய அனுமதி வழங்க வேண்டும். அப்படி அவர்கள் நமக்கு பலமான கட்டுப்பாடுகளை விதிக்கும் போது, நாமும் மேற்கண்ட நாட்டு மக்களை நம் நாட்டில் நுழைய அனுமதிக்க முடியாது. இந்த நடவடிக்கைகளை வெளியுறவு அமைச்சு ஆராய்ந்து வருகிறது. இருந்தாலும், இது சுகாதார அமைச்சின் அனுமதி அளித்த பிறகே முடிவு செய்யப்படும்,” என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.


Pengarang :