JOHOR BAHRU, 4 Feb — Dua kakitangan jabatan kesihatan Johor Bahru bertugas untuk memantau simptom demam pengguna yang keluar dan masuk dari Singapura bagi mencegah penularan jangkitan 2019 Novel Koronavirus (2019-nCoV) di Kompleks Kastam, Imigresen dan Kuarantin (CIQ) di Bangunan Sultan Iskandar (BSI) hari ini. –fotoBERNAMA(2020) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

நாட்டின் எல்லைகளை திறப்பது, அரசாங்கத்தின் இறுதித் தீர்வாகும் !!!

பொந்தியான், ஜூலை 11:

கோவிட்-19 தொற்று நோய் பரவலை எதிர் கொள்ள நாட்டின் எல்லைகளை திறப்பது இறுதி தீர்வாக அமையும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அடாம் பாபா கூறினார். இறக்குமதி நோய் சம்பவங்களை தடுக்க எடுக்கும் அரசாங்கத்தின் முயற்சி இதுவாகும் என அவர் மேலும் தெரிவித்தார். பல்வேறு இறக்குமதி சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது என்றார் அவர்.

” நமது நடைமுறையில் கோவிட்-19 தொற்று நோயை எதிர்த்து போராடவும் அல்லது பாதுகாக்கவும் செய்ய வேண்டும். நாட்டின் எல்லைகளை பாதுகாப்பது நமது கடமையாகும். இதில், நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமது எல்லை கோலா லம்பூர் அனைத்துலக விமான நிலையம் மட்டுமல்ல. மாறாக, ஜொகூர், தாய்லாந்து கூட்டு எல்லை, சபா மற்றும் சரவாக் எல்லைகள் இதில் அடங்கும்,” என்று இன்று கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு அடாம் பாபா வலியுறுத்தினார்.


Pengarang :