NATIONAL

பாக்காத்தான்: மக்களவை அமைச்சரவை கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரமாக இருக்க வேண்டும்

ஷா ஆலம், ஜூலை 14:

மக்களவை அமைச்சரவை கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும் சட்டத்தை இயற்றுவது மற்றும் ஜனநாயக நாட்டில் நீதியான முறையில் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்துயோன் கூறினார். நேற்று மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ அரீப் யூசுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவத்தை மேற்கோள்காட்டி அவர் இவ்வாறு கருத்துரைத்தார். காமன்வெல்த் நாடுகளில் மலேசியாவில் மட்டுமே முதன்முறையாக இவ்வாறு நடைபெற்றுள்ளது என சைபுடின் தெரிவித்தார்.

” பாக்காத்தான், இன்றைய அரசாங்கத்தின் நடவடிக்கையை கண்டு கவலை அடைகிறது. பெரிக்காத்தான் அரசாங்கம் மக்களவையை அமைச்சரவையின் கீழ் வைத்துக்கொள்ள விரும்புகிறது. அது மட்டுமல்ல, சபாநாயகரை மாற்றும் விவாதத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே அனுமதி வழங்கியது ஏமாற்றம் அளிக்கிறது. அதுவும் ஒருவருக்கு 10 நிமிடங்கள் கொடுத்தது, ஜனநாயக மரபுக்கு எதிரான ஒன்று,” என்று சைபுடின், டத்தோ டாக்டர் ஹாத்தா ரம்லி மற்றும் அந்தோணி லோக் சியு ஃபூக் ஆகியோர் கூட்டாக கையொப்பம் இட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.


Pengarang :