Dato’ Menteri Besar, Dato’ Seri Amirudin Shari melepaskan Konvoi Info On Wheels Merdeka pada Majlis Pelancaran Bulan Kebangsaan dan Kempen Kibar Jalur Gemilang Peringkat Negeri Selangor 2020 di Auditorium Dewan Jubli Perak SUK, Shah Alam pada 28 Julai 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: நிலைத்தன்மையை தொடருவோம், கோவிட்-19 நோய் தாக்கத்தை எதிர் கொள்ள மக்களுக்கு உதவுவோம் !!!

ஷா ஆலம், ஜூலை 28:

சிலாங்கூர் மாநில அரசாங்க நிர்வாகத்தின் நிலைத்தன்மையை தொடர்ந்து பேணிக் காக்கும் வேளையில் கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தினால் பொழிவற்ற  மக்களின் பொருளாதார சுமையை குறைக்க உதவும் நோக்கில் மூன்றாம் கட்ட பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை தீட்டியுள்ளது என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். இத்திட்டம் வெற்றிகரமாக இலக்கை அடைய பொதுச் சேவை ஊழியர்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது என்று அவர் கூறினார். இதற்கு முன்பாக கடுமையாக்கப்பட்ட நடமாடும் கட்டுபாடு ஆணை (பிகேபிடி) காலகட்டத்தில் கோவிட்-19 தொற்று நோய் பரவலை தடுக்கும் முயற்சிகளில் மாநில அரசாங்கம் வெற்றி அடைந்ததை மந்திரி பெசார் சுட்டிக் காட்டினார்.

” இவ்வேளையில் நான் இதை மீண்டும் கூட கடமைப் பட்டுள்ளேன். சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தலைமை நிர்வாகியாக நானும், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில அரசாங்கச் செயலாளர் மற்றும் மாநில நிதித்துறை அதிகாரி ஆகியோர் இணைந்து பணியாற்றி மாநில நிர்வாகத்திற்கு நிலைத்தன்மையை ஏற்படுத்தி இருக்கின்றோம். இதன் மூலம் சிலாங்கூர் மாநிலம் கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தில் இருந்து மீண்டு வர உறுதிப் படுத்துவோம். பொருளாதார பாதிப்பை எப்படி எதிர் நோக்குவது எனாபதை நாங்கள் தீர்மானிப்பது. ஆண்டவன் புண்ணியத்தில் நாம் அரசியல் சண்டைகளைப் பற்றி யோசிக்கவில்லை. இதன் வழி யாருக்கும் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. கடந்த சிலாங்கூர் மாநில சட்டசபையில் மலேசியாவில் முதன் மாநிலமாக சிலாங்கூர் தனது பல பில்லியன் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை தாக்கல் செய்தது. நாம் வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை வழி நடத்தி வருவது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது,” என்று ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற ” ஜாலுர் கெமிலாங் பறக்க விடுவோம்” நிகழ்ச்சியை அதிகாரப் பூர்வமாக திறந்து வைத்து பேசும் போது இவ்வாறு அமிருடின் ஷாரி வலியுறுத்தினார்.


Pengarang :