RENCANA PILIHANSELANGOR

250,000 சிலாங்கூர் வாழ் மக்கள், ஆயர் டாரூல் எசான் திட்டத்தில் பயன் அடைவார்கள் !!!

ஷா ஆலம், ஜூலை 15: சிலாங்கூர் மாநிலத்தில் 250,000 தனிநபர் குடிநீர் மீட்டர் பயனீட்டாளர்கள் ஆயர் டாரூல் எசான் திட்டத்தில் வழி இலவச குடிநீரை பெறுவார்கள் என்று உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹாசிம் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

” கடந்த ஆண்டு ஜூலை 15-இல் சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனம் (ஆயர் சிலாங்கூர்) மொத்தம் 184,020 தனிநபர் குடிநீர் மீட்டர் பயனீட்டாளர்கள் இந்த இலவச குடிநீரை பெறுவார்கள். ஆனாலும், மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வரும் மக்கள் நேரிடையாக இலவச குடிநீரை பெறுவார்கள். இதன் மூலம் மொத்தம் 250,000 பயனீட்டாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் அடைவார்கள்,” என்று புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷாகாரன் கேட்டக் கேள்விக்கு பதில் அளித்த போது இவ்வாறு இஷாம் ஹாசிம் இவ்வாறு பேசினார்.

சிலாங்கூர் மாநில பொது வசதிகளின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வரும் இஷாம் ஹாசிம் கடந்த 31 டிசம்பர் 2019 வரை மொத்தம் 226,969 விண்ணப்பங்கள் வந்ததாக மேலும் தெரிவித்தார். இதில் 15,625 விண்ணப்பங்கள் விவேக பரிவுமிக்க மக்கள் நலன் திட்டத்தில் பதிவு செய்ய முடியவில்லை என்று கூறினார். இத்திட்டத்தின் பயன் அடைபவர்கள் மாத குடும்ப வருமானம் ரிம 4,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று அவர் விவரித்தார்.


Pengarang :