Ketua Pengarah Kesihatan, Datuk Dr Noor Hisham Abdullah
NATIONAL

620 நபர்கள் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும்- சுகாதார அமைச்சு கட்டளை

புத்ராஜெயா, ஜூலச3:

கோவிட்-19 தொற்று நோய் தொடர்பில் தனிமைப் படுத்தப்பட்ட நபர்களில் 13-ஆம் நாள் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டி இருந்த, 620 பேரை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டிருக்கிறது.  கடந்த ஜூன் 29-ஆம் தேதியில் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட, 852 பேர் குறைவாக இருப்பதாக, சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

அவர்கள், கடந்த ஜூன் 10-ஆம் தேதி, தனிமைப்படுத்தும் மையத்திலிருந்து வீடு திரும்பி, கண்காணிப்பிற்கு உட்படுத்தப் 5,804 பேரில் ஒரு பகுதியினர் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். 13-ஆம் நாள் பரிசோதனைக்குப் பின்னர் இந்நோய்த் தொற்று இல்லாத காரணத்தினால் 5,184 தங்களின் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

13-ஆவது நாள் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்களை மாவட்ட சுகாதார இலாகா மற்றும் காவல்துறையுடன் இணைந்து தீவிரமாக அடையாளம் கண்டு வருகிறது.  இந்த வீட்டுக் கண்காணிப்பு உத்தரவின்கீழ், விதிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று சுகாதார அமைச்சு நினைவுறுத்தி இருக்கிறார்.  இந்த கட்டளையை பின்பற்றத் தவறினால்  அவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என காவல்துறை நினைவு படுத்தியது.


Pengarang :