SELANGORYB ACTIVITIES

ஆதரவற்ற சிறார்களை உபசரித்தார் மோரிப் சட்டமன்ற உறுப்பினர்

மோரிப், அக் 24- ஜென்ஜாரோம், தாமான் டேசா ஜரோமில் உள்ள மஹா பரிவு நல அமைப்பிலுள்ள ஆதரவற்ற சிறார்களை மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடின் சந்தித்து அவர்களுடன் அளவளாவினார்.
இந்த வருகையின் போது அவர் அந்த மையத்தின் பராமரிப்பாளரிடம் அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார். இந்த மையத்தில் ஒன்று முதல் பன்னிரண்டு வயது வரையிலான 15 ஆதரவற்றச் சிறார்கள் தங்கியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த மையம் சிறார்களைப் பராமரிப்பதற்கு நிரந்தர வருமானம் இல்லாத நிலையில் உள்ளதாக அவர் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடின் கூறினார்.
மூன்று பராமரிப்பாளர்களால் நடத்தப்படும் இந்த மையத்தில் வழக்கமாக பகல் வேளையில் சமைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோல லங்காட் மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் அல்லாத இரு ஆதரவற்ற சிறார் பராமரிப்பு மையங்களில் இதுவும் ஒன்றாகும் எனவும் அவர் சொன்னார்.
கட்டிட வாடகை மற்றும் மின்சார, நீர் கட்டணங்கள் தொடர்பான சுமைகளைக் குறைப்பதற்கு ஏதுவாக இந்த மையத்தை சமூக நலத் துறையில் பதிவு செய்வதற்கு தாம் தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :