NATIONALSELANGOR

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் லாபுவானில் ஊழியர் சேம நிதி வாரியத்தின் அலுவலகங்கள் முடக்கம்

கோலாலம்பூர் அக் 22;- இன்று 22-10-2020 தொடங்கிச் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் லாபுவான் ஆகிய மாநிலங்களில் உள்ள ஊழியர் சேம நிதி வாரியம் அதன் எல்லா அலுவலகங்களையும் அடுத்த அறிவிப்புவரை தற்காலிகமாக மூடுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது கோவிட் 19 நோய் பெருந் தொற்றைத் தொடர்ந்து, அமல்படுத்தப் பட்டிருக்கும் நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டத் தடை உத்தரவு விதிகளுக்கு ஏற்ப
வீட்டிலிருந்து வேலைச் செய்யப் பணிக்கப்பட்டுள்ளதற்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அது கூறியது.

அதன் தொடர்பில் அது மேலும் கூறுகையில் நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டத் தடை உத்தரவு காலங்களில் மேற்குறிப்பிட்ட இடங்களிலுள்ள ஊழியர் சேமநிதி வாரிய அலுவலகங்களுடன் மறுசந்திப்புக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்து முன்னேற்பாடுகளும் ரத்தாகி விட்டதாகவும், நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டத் தடை உத்தரவு காலம் முடிவுக்கு வந்த பின் சந்திப்புக்கான தேதிகள் மீண்டும் நிர்ணயிக்கப்படும் என்கிறது.

தங்கள் பணியாளர்களின் சந்தா கட்டணங்களை செலுத்தும் நிறுவனங்கள் இணைய கணக்குகள் மூலமும், வங்கிகளின் மூலமும் அதனை தொடர்ந்து செலுத்தலாம் என்றது. இந்த நடைமுறைகள் பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும் மக்களின் நலனையும், சேமத்தையும் கருத்தில் கொண்டு தங்கள் இந்த இக்கட்டான முடிவை எடுக்க வேண்டி உள்ளதாக இது குறிப்பிட்டுள்ளது.


Pengarang :