MEDIA STATEMENTSELANGORYB ACTIVITIES

இந்து ஆலயங்களுக்குக் கோலக் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஷாம் ஷாமான் ஹுரி நிதி

கோலக் கிள்ளான் நவ 30;- ஞாயிறு காலை 10.00 மணிக்குக் கோலக் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஷாம் ஷாமான் ஹுரி அவர் சட்டமன்ற அலுவலகத்தில் 12 இந்து ஆலயங்களுக்கு மானியம் வழங்கினார்.

பண்டமாரான் பெர்மாயிலுள்ள அவரின் சட்ட மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிதி வழங்கும் வைபவத்திற்கு நடப்பிலுள்ள நடமாட்டக் கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப ஆலயத்தலைவர்கள் மட்டும் அழைக்கப் பட்டிருந்தனர். அவர்களுடன் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சார்ல்ஸ் சந்தியாகோ, கோல லங்காட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மற்றும் அவ்வட்டார நகராட்ச்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

அந் நிகழ்ச்சி குறித்துக் கருத்துரைத்த இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஷாம் அவர் தொகுதியில் உள்ள 12 இந்து ஆலயங்களுக்கும் தனது சட்டமன்ற உறுப்பினர் ஒதுக்கீட்டிலிருந்து இந்தத் தொகையை வழங்குவதாகவும். ஆலயங்கள் மாநில அரசாங்கத்திடமிருந்து நிதியும் பெற முடியும், அதற்கு ஆதரவுக் கடிதங்களையும் ஆலயங்களுக்கு வழங்கி வருவதாகவும் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் கெஅடிலான் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடந்து வருகிறது, இங்கு, மொழி சமய வேறுபாடுகளின்றி ஆண்டுதோறும் எல்லாச் சமய ஆலயங்களுக்கு மட்டுமின்றி எல்லாத் தாய் மொழிப் பள்ளிகளுக்கும் மாநில அரசின் மூலம் மானியங்கள் வழங்கி வருவது இந்த அரசாங்கம் எல்லாச் சமயங்களையும் மதிப்பதற்கான அடையாளமாகும்.

அந்த ரீதியில் சட்ட மன்ற உறுப்பினராகத் தனது ஒதுக்கீட்டிலிருந்தும் ஆலயங்களுக்கு மானியம் அளிப்பதானது. நாங்கள் அனைத்துச் சமயத்தினரும் மதிக்கிறோம், எல்லா மக்களும் ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வதற்கு அரசாங்கமே முன் உதாரணமாக விளங்க வேண்டும் என்பதில் ஆழமான அக்கறை கொண்டவர்கள் நாங்கள்.

நம் நாட்டில் மக்களிடையே நற்பண்புகளை விதைப்பதில் அரசியல் வாதிகளும் அரசாங்கங்களும் முன் உதாரணமாக விளங்க வேண்டும், அதன் வழியே நாம் சகோதரத்துவத்தை வளர்க்க முடியும் என்றார் அவர்.


Pengarang :