Penduduk Kampung Gombak mengutip sampah di tebing Sungai Kuang pada 27 Sept 2020. Foto Air Selangor
ALAM SEKITAR & CUACAECONOMYPBTSELANGOR

சட்ட விரோதமாக குப்பை கொட்டும் நடவடிக்கை இவ்வாண்டு 50 விழுக்காடு குறைந்தது

ஷா ஆலம், நவ 6-  சிலாங்கூர் மாநிலத்தில் சட்ட விரோதமாக குப்பை கொட்டும் நடவடிக்கை இவ்வாண்டு 50 விழுக்காடு குறைந்துள்ளதாக ஊராட்சி மன்றங்களுக்கான 
ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

சட்ட விரோதமாக குப்பை கொட்டும் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்தாண்டில் 1,983 ஆக இருந்த வேளையில் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 874 ஆக குறைந்துள்ளதாக அவர் சொன்னார்.

இத்தகைய குற்றங்களுக்கு ஊராட்சி மன்ற நிலையில் தண்டனை வழங்கும் 
சம்பவங்களும் வெகுவாக குறைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

சட்ட விரோதமாக குப்பை கொட்டியது தொடர்பில் கடந்தாண்டில்  1,592 சம்பவங்கள் 
தண்டனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாண்டு அத்தகைய சம்பவங்களின் 
எண்ணிக்கை 364 ஆக குறைந்துள்ளது. காஜாங்கில் இந்த எண்ணிக்கை 151 இல் இருந்து 71 ஆக குறைந்துள்ளது என்றார் அவர்.

சட்ட விரோதமாக குப்பை கொட்டும் நடவடிக்கையில் ஈடுபடும் நில உரிமையாளர்கள் மீது மாவட்ட நில அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்றங்கள் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

Pengarang :