ALAM SEKITAR & CUACAECONOMYPBTSELANGOR

சிக்காமாட் ஆற்றை ஆழப்படுத்தும் பணி அடுத்தாண்டு தொடங்கும்

காஜாங், நவ 26- இங்குள்ள சிக்காமாட் ஆற்றை ஆழப்படுத்தும் மற்றும் கரைகளில் தடுப்புகளை அமைக்கும் பணி அடுத்தாண்டு தொடங்கும் என்று சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹி லோய் சியான் கூறினார்.
சுமார் ஒரு கோடி வெள்ளி செலவிலான இந்த பணிகள் 12வது மலேசியத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
இத்திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் அப்பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்னைக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண முடியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்த திட்டம் கம்போங் சுங்கை சிக்காமாட் தொடங்கி பத்து கிலோமீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்படும். அடுத்தாண்டு இறுதிக்குள் இத்திட்டம் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது என்று சம்பந்தப்பட்ட பகுதிக்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
காஜாங் வட்டாரத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது இந்த சுங்கை சிக்காமாட் ஆறு ஆகும். முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் ஆற்றில் மணல் நிறைந்து காணப்படுகிறது என்றார் அவர்.
குத்தகையாளர்கள் ஆற்றிலிலுள்ள மணலை அகற்றாமலும் தடுப்புகளை பராமரிக்காமலும் விட்டு விட்டதால் மழை காலத்தில் சீரான நீரோட்டம் தடைபட்டு வெள்ளம் ஏற்படுகிறது என்று காஜாங் சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.


Pengarang :