ALAM SEKITAR & CUACANATIONALSELANGOR

சுற்றுச் சூழல் குற்றங்கள் குறித்து தகவல் தருவோருக்கு வெ. 20,000 வெகுமதி- சிலாங்கூர் அரசு அறிவிப்பு

ஷா ஆலம், நவ 27- சுற்றுச் சூழல் குற்றங்களை புரிந்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு தகவல்களை தருவோருக்கு சிலாங்கூர் அரசு வெகுமதியாக 20,000 வெள்ளியை வழங்கும்.

மாநிலத்தின் நீர் வளத்தை பாதுகாப்பிலும் நீர் வளங்களின் பாது காப்பிற்கெதிரான குற்றச் செயல்களை தடுப்பதிலும் பொதுமக்களின் பங்கேற்பு முக்கியமானது என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நீர் வளங்களை மாசு படுத்துவோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தண்டனை பெறும் வகையில் பயனான தகவல்களை பொது மக்களிடமிருந்து தொடர்ச்சியாக எதிர் பார்க்கிறோம் என்றார் அவர்.

நீர் தூய்மைக்கேட்டு பிரச்சினையின் தாக்கத்தை குறைப்பதற்காக குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்களை அரசு வரைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீர் தூய்மைக்கேட்டுக்கு காரணமானவர்களுக்கு கட்டாயச் சிறைத்தண்டனை மற்றும் பத்து லட்சம் வெள்ளி வரையிலான அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை மாநில சட்டமன்றம் இம்மாத தொடக்கத்தில் அங்கீகரித்து.


Pengarang :